Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 17 கோடியை தாண்டியது

மே 10, 2021 07:16

புதுடெல்லி: இந்தியாவில் பல்வேறு வகையான பயனாளர்களை அடையாளம் கண்டறிந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே 1-ம் தேதி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிவேகத்தில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 2-வது அலை நாட்டில் வேகமெடுத்துள்ளதால் தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை மத்திய, மாநில அரசுகள் மேலும் அதிகரித்து இருக்கின்றன. இதன்மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 17 கோடியைத் தாண்டியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்