Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவை சமாளிக்க வெளிநாட்டு உதவி : மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

மே 11, 2021 04:54

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமான சூழலை சமாளிக்க பல்வேறு வெளிநாடுகள் உதவி வருகின்றன. குறிப்பாக தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் உற்பத்தி தளவாடங்கள், வென்டிலேட்டர்கள் என பெருமளவில் உதவிகளை குவித்து வருகின்றன.

இவ்வாறு வெளிநாட்டு உதவிகளை பெறுவதையும், அதற்காக மத்திய அரசு பெருமிதம் கொள்வதையும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘வெளிநாட்டு உதவிகளை பெறுவதில் மத்திய அரசு மீண்டும் மீண்டும் மார்தட்டிக்கொள்வது பரிதாபமாக உள்ளது. மத்திய அரசு தனது கடமையை செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் வெளிநாட்டு உதவிகளை பெறுவதில் வெளிப்படைத்தன்மையை பின்பற்றுமாறு அறிவுறுத்தி உள்ள ராகுல் காந்தி, பல்வேறு நாடுகளில் இருந்து பெற்றுள்ள உதவிகளின் விவரங்களை பொதுவெளியில் அறிவிக்குமாறும் பிரதமர் மோடியை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்