Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலக நாடுகளில் இருந்து வந்த கோவிட் உதவிப் பொருட்கள் என்னென்ன?- மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

மே 11, 2021 06:38

பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ள கோவிட் நிவாரண உபகரணங்கள் குறித்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கோவிட் தொற்றின் பாதிப்பு பெரும் மடங்கு நாட்டில் உயர்ந்திருப்பதால் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் நிவாரண மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்கி வருகின்றன.

இந்த நிவாரணப் பொருட்களை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரைந்து விநியோகிக்கும் பணியில் “அரசின் முழுமையான” அணுகுமுறையுடன் பல்வேறு அமைச்சகங்களும் துறைகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. 2021 ஏப்ரல் 27 முதல் மே 9 வரை பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் இணைந்து 8900 பிராணவாயு செறிவூட்டிகள், 5043 பிராணவாயு சிலிண்டர்கள், 18 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 5698 செயற்கை சுவாசக் கருவிகள், சுமார் 3.4 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன.

2021 மே 9 அன்று அமெரிக்க இந்திய கூட்டு மன்றம், இங்கிலாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட முக்கிய பொருட்கள்:

* செயற்கை சுவாசக் கருவிகள் (1000)

* பிராணவாயு செறிவூட்டிகள் (2267)

* ஆக்சிமீட்டர் (10000)

* சிலிண்டர் (200)

பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வழங்கப்படும் பொருட்கள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் துரிதகதியில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்காக பிரத்தியேக ஒருங்கிணைப்பு மையம் ஒன்றை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாகியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்