Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகனத்தில் சென்றவர்களுக்கு அபராதம்

மே 11, 2021 07:18

நல்லூர்: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நேற்று முதல் 24-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிறு மளிகை கடைகள், காய்கறி, பேக்கரி உள்ளிட்டவைகள் மதியம் 12 மணி வரை திறந்து இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகம் 3 வேளை குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு மட்டும் பார்சல் கொடுக்க மட்டுமே அனுமதி அளித்துள்ளது. மேலும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பொருட்கள் வாங்க என ஏதேனும் காரணம் சொல்லி சாலையில் வழக்கம் போல வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இதனால் நல்லூர் போலீசார் இன்ஸ்பெக்டர் சொன்ன கேசவன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், பழனிசாமி ஆகியோர் காங்கேயம் சாலையிலும், தாராபுரம் சாலையிலும் ஆங்காங்கே சாலையில் தடுப்புகள் அமைத்து ஒரு வழி சாலையாக மாற்றி வாகன சோதனை செய்து வருகின்றனர். அப்போது விதிமுறை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் முககவசம், ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்