Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை சென்னையில் 10 காவலர்கள் உயிரிழப்பு

மே 12, 2021 02:51

சென்னை: கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை சென்னையில் 10 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் போக்குவரத்து புலானாய்வு காவலராக பணியாற்றி வந்தவர் சுரேஷ் குமார். கடந்த 2017 ம் ஆண்டு முதல் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யபட்ட நிலையில் சென்னைசென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  கடந்த மே1ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்தநிலையில் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் உயிரிழந்த காவலர் சுரேஷ்குமார் உருவபடத்திற்கு மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இரண்டாம் கட்ட கொரோனா பரவலில் இதுவரை 10 பேர் காவல் துறை சேர்ந்தவர்கள் இறந்துள்ளனர். இதில் 6 பேர் போக்குவரத்து காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர். காவல் துறையினர் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு உடனடியாக 3 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படுகிறது.

மேலும் கொரோனாவால் காவல்துறையினர் உயிரிழப்பை தடுக்கும் வகையில், காவலர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்