Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீவாஞ்சியம் கோயில் சார்பாக மருத்துவமனையில் உணவு வழங்கப்பட்டது

மே 13, 2021 05:12

திருவாரூர்: ஸ்ரீவாஞ்சியம் கோயில் நிர்வாகம் சார்பாக நன்னி லம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்கப் பட்டது.

தமிழக அரசின் அறிவுரையின்படி, கோயில்களில் தினசரி வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் நடை பெற்று வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றின் கார ணமாக அனைத்து ஆலயங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனையொட்டிப் புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அரசு, கோயில் களில் வழங்கப்பட்ட அன்னதானத்தை, அந்தந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கிட உத்தரவிட்டதன் பேரில், இந்து சமய அறநிலையத்துறை நாகப்பட்டினம் இணை ஆணையர் அறிவுரையின் பேரில், ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாதர் சுவாமி கோயில் நிர்வா கம் சார்பில் வியாழக்கிழமை, நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 150 நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இதைத்தவிர ஸ்ரீவாஞ்சியம் கோயில் வெளியேக் காத்திருந்த பக்தர்களுக்கும், முதியவர்களுக்கும் 25 உணவுப் பொட் டலங்களும் வழங்கப்பட்டது. ஸ்ரீவாஞ்சியம் கோயில் நிர்வாகம் சார் பாக உணவுப் பொட்டலம் வழங்கும் நிகழ்ச் சியில், செயல் அலுவலர் சுரேந் திரன், அறநிலையத்துறை ஆய்வாளர் கருணா நிதி, நன்னிலம் அரசு மருத்து வமனைத் தலைமை மருத்துவர் வினோத்குமார், நன்னிலம் வட்ட வருவாய் முதுநிலை ஆய்வாளர் கருண மூர்த்தி, ஸ்ரீவாஞ்சியம் ஊராட்சி மன்றத்தலைவர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்