Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வித்தியாசமான ரமலான் பெருநாள்: நாகூர் கலீபா சாஹிப் ரமலான் பெருநாள் வாழ்த்து

மே 13, 2021 05:31

நாகை: கொரோனா யுத்தத்தில் மற்றுமொரு வித்தியாசமான ரமலான் பெருநாள். கொரோனா ஒழிய பாடுபடுவோம் என நாகூர் கலீபா சாஹிப் ரமலான் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 

உலகமெங்கும் வியாபித்துள்ள சகோதர சகோதரிகளுக்கு ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். கொரோனா யுத்தத்தில் மற்றுமொரு வித்தியாசமான பெருநாள் இது, பள்ளிவாசல் இல்லா, ஜமாஅத் தொழுகை இல்லா வித்தியாச பெருநாள் இது. இருந்த போதும் தனித்திருந்து, விழித்தி ருந்து, பசித்திருந்து, இறைவனை பிரார்த்தித்த இனிய பெருநாள் இது. தனியே வழிபடும் பொழுது நமது மனம் இறையச்சத்தின் அதிகமாக மூழ் கியிருக் கும். அத்தகைய சூழ்நிலையை நமக்கு உரு வாக்கித் தந்த புனித பெருநாள் இது.

இந்த புனித நாளில் சகோதரத்துவம் ஓங்கி தழைக்க எல்லாம் வல்ல இறைவ னிடம் பிரார்த்திப்போம். நோயற்ற, கிருமிகள் அற்ற புதிய உலகத்தை நமக்கு இறைவன் தந்தருள மன்றாடி பிரார்த் திப்போம். நமக்கும் நமது குடும்பத்தாருக்கும் நமது நண்பர்களுக் கும் வியாபாரம் தழைக்கவும். செல்வங்கள் கொழிக்கவும் வரும் வருடங்கள் சிறப்பான தாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

இனிய நிகழ்வுகளை வலுப்படுத்தும் கடமை நம் அனை வருக்கும் உண்டு. அதில் விருந்தோம்பல் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு வசதிப்படும் ஒரு நாளில் சகோதர சமுதாய நண்பர்களுக்கு, நம்மிடம் அவர் கள் விரும்பும் பிரியாணியை அவரவர் வீடுகளுக்கு கொடுத்து அனுப்புவோம். சைவப்பிரியர்களுக்கு இனிப்புகளை கொடுத்து அன்பை பரிமாறுவோம். நமது நாட்டில் பண்டிகைகள் மூலம் நல்லுறவு வலுப்படுத்தும் பணிகளை முன்னெடுப்போம் என நாகூர் தர்கா பரம்பரை ஆதீனமும் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளருமான நாகூர் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்