Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய அணி முதலிடம்

மே 14, 2021 06:37

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 24 போட்டிகளில் விளையாடி 121 புள்ளிகள் பெற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்
முதலிடம் பிடித்தது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 என தொடரை கைப்பற்றினாலும் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை.

இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்
போட்டிக்கு முன்னேறியது. மேலும், இன்று வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது.

இந்தியா 24 போட்டிகளில் விளையாடி 121 புள்ளிகளுடன் முததல் இடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து 18 போட்டிகளில் விளையாடி 120 புள்ளிகளுடன் 2-வது
இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 32 போட்டிகளில் விளையாடி 109 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 17 போட்டிகளில் விளையாடி 108
புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 24 போட்டிகளில் விளையாடி 94 புள்ளிகளுடன்  5-வது இடத்திலும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் 84 புள்ளிகளுடன்
6-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 80 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், இலங்கை 78 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், வங்காளதேசம் 46 புள்ளிகளுடன் 9-வது
இடத்திலும், ஜிம்பாப்வே  35 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

தலைப்புச்செய்திகள்