Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனா; சர்வதேச நாடுகள் வழங்கி வரும் உதவிப்பொருட்கள்: விவரங்கள் வெளியீடு

மே 14, 2021 07:12

இந்தியாவில் கரோனா பரவலையடுத்து சர்வதேச நாடுகள் வழங்கி வரும் உதவிப் பொருட்களை மாநிலங்களுக்கு வழங்கியுள்ள விவரங்களை மத்திய அரசு
தெரிவித்துள்ளது. கோவிட் மேலாண்மைக்கான சர்வதேச சமூகத்தின் உதவிகளை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உரிய காலத்தில் முறையாக விநியோகிக்கிறது மத்திய அரசு

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு ஆதரவளிக்கும் வகையில், சர்வதேச சமூகம் அளித்துவரும் உதவிகளில், தங்களது
உள்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்வதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இதுவரை 9,284 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 7,033 ஆக்சிஜன்
சிலிண்டர்கள், 19 ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள், 5,933 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் சுமார் 3.44 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை மத்திய அரசு
விநியோகித்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தில் மூன்றாவது கட்டம் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசியின்
மொத்த எண்ணிக்கை 17.90 கோடியைக் கடந்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்