Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முல்லைபெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

மே 14, 2021 07:21

கூடலூர்: மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. சோத்துப்பாறை அணை முழுகொள்ளளவான 126.21 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 57 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. 54 கனஅடிநீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்மழையால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 47.60 அடியாக
உயர்ந்துள்ளது. 96 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 128.35 அடியாக உள்ளது. அணைக்கு 150 கனஅடிநீர் வருகிறது. நேற்று வரை 150 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில்
இன்று காலை நீர்திறப்பு 300கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 62.61 அடியாக உள்ளது. 196 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர
குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 8.6, தேக்கடி 3.4, கூடலூர் 4.7, சண்முகாநதிஅணை 2.6, உத்தமபாளையம் 6.2, வீரபாண்டி 7.4, வைகை அணை 9.2, மஞ்சளாறு 32, மருதாநதி 18,
சோத்துப்பாறை 2, கொடைக்கானல் 17.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

தலைப்புச்செய்திகள்