Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயிகள் நிதிஉதவி திட்டம் - 8வது தவணை நிதியை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

மே 14, 2021 07:28

புதுடெல்லி: பிரதமரின் விவசாயிகள் நிதிஉதவி திட்டப்படி, நாடு முழுவதும் தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயை 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இப்பணம் செலுத்தப்படுகிறது. இதுவரை ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தின் 8-வது தவணைத் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். 9 கோடியே 50 லட்சத்துக்கு மேற்பட்ட
விவசாய குடும்பங்களின் வங்கிக்கணக்கில் ரூ.19 ஆயிரம் கோடி செலுத்தப்படும்.

காணொலி காட்சி மூலம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், சில பயனாளிகளுடன் பிரதமர் உரையாடுகிறார். மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமரும் கலந்து
கொள்கிறார்.

தலைப்புச்செய்திகள்