Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மரணம்- மு.க.ஸ்டாலின் இரங்கல்

மே 14, 2021 07:31

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட் டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்த நிலையில் மரணம் அடைந்திருப்பதை அறிந்து வேதனையுற்றேன். தகவல் அறிந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.

ஓ.பாலமுருகனை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்
தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்