Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனா நிவாரண நிதியாக ரூ.11.39 கோடி திரட்டிய கோலி - அனுஷ்கா தம்பதி

மே 15, 2021 06:10

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் இணைந்து கடந்த வாரம் கரோனா நிவாரண நிதியாக ரூ.7 கோடி திரட்ட முடிவு செய்தனர். இதற்காக கெட்டோ எனும் இணைய தளம் மூலம் 7 நாட்கள் பிரச்சாரம் செய்தனர். இதில் முதல் பங்களிப்பாக கோலியும், அனுஷ்காவும் இணைந்து ரூ.2 கோடி வழங்கினர்.

இந்நிலையில் விராட் கோலி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “ஒரு முறை அல்ல நாங்கள் இரு முறை இலக்கை தாண்டிவிட்டோம். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.

நிதி உதவி அளித்தவர்களுக்கும், இந்த தகவலை பகிர்ந்த வர்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த கடினமான காலக் கட்டத்தை நாம்
ஒன்றாக கடந்து செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தனது பதிவில், எவ்வளவு நிதி சேர்ந்துள்ளது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார். அதில், ரூ.11 கோடியே 39 லட்சத்து 11 ஆயிரத்து 820 திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்