Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி இன்று தொடக்கம்

மே 15, 2021 06:19

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், முதலில் கையெழுத்திட்ட 5 கோப்புகளில் இதுவும்
ஒன்று. அதன் அடிப்படையில், முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம் 15-ந்தேதி (இன்று) முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த நிவாரண பணியை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் முறையில்
தினமும் 200 பேருக்கு வினியோகிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 10-ந்தேதி முதல் 3 நாட்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகிக்கும் பணி
நடைபெற்றது. தற்போது, அந்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தமிழகம் முழுவதும்
தொடங்க இருக்கிறது.

ரேஷன் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில், ரேஷன் கடைகளுக்கு நேரடியாகச் சென்று ரூ.2 ஆயிரம்
ரொக்கத் தொகையை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் ரூ.500 நோட்டுகள் 4 எண்ணிக்கையில் வழங்கப்படும்.

இதற்காக, ரூ.4 ஆயிரத்து 153 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கடந்த 10-ந்தேதி சென்னை தலைமைச்செயலகத்தில்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்