Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் 16 நாளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 42 லட்சம் பேருக்கு தடுப்பூசி

மே 16, 2021 07:59

புதுடெல்லி: இந்தியாவில் 16 நாளில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 42 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்து, உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி 16-ந் தேதி அமலுக்கு வந்தது.

இந்த திட்டத்தின் கீழ், நேற்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை நாட்டில் 18 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 579 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

* சுகாதார பணியாளர்களில் 96 லட்சத்து 27 ஆயிரத்து 650 பேர் முதல் டோசும், 66 லட்சத்து 22 ஆயிரத்து 40 பேர் இரண்டாவது டோசும்
செலுத்திக்கொண்டுள்ளனர்.

* 1 கோடியே 43 லட்சத்து 65 ஆயிரத்து 871 முன்கள பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 81 லட்சத்து 49 ஆயிரத்து 613 முன்கள பணியாளர்கள்
இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.

* 60 வயது கடந்த 5 கோடியே 43 லட்சத்து 17 ஆயிரத்து 646 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 1 கோடியே 75 லட்சத்து 53 ஆயிரத்து 918
பேர் இரண்டாவது டோசும் செலுத்திக்கொண்டு விட்டனர்.

* 45 வயது கடந்தவர்களில் 5 கோடியே 68 லட்சத்து 5 ஆயிரத்து 772 பேர் முதல் டோஸ், 87 லட்சத்து 56 ஆயிரத்து 313 பேர் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர்.

* 18-45 வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவது கடந்த 1-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த 16 நாட்களில் 18-45 வயது பிரிவினரில் 42 லட்சத்து 58
ஆயிரத்து 756 பேர் முதல் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர்.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

தலைப்புச்செய்திகள்