Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆஸ்பத்திரிக்கு செல்ல பயம்... வினோதமான முறையில் தனிமைப்படுத்திய கொரோனா நோயாளி

மே 16, 2021 08:03

திருமலை: தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் கொத்தனிகொண்டா கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது25). குடும்பத்தினருடன் ஒரே அறையுடன் கூடிய வீட்டில் வசித்துவரும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் ஏற்கனவே அதிகளவில் இருப்பதால் அங்கு செல்ல பயந்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள சிவா
முடிவு செய்தார். ஆனால் தங்கள் வீட்டில் ஒரே ஒரு அறை மட்டும் உள்ளதால் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்பட்டு விடும் என்று அஞ்சிய சிவா வினோத வகையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தன்னை எப்படி தனிமைப்படுத்திக் கொள்வது என்று ஆலோசனை செய்த சிவா அதற்கு தனது வீட்டின் முன்பு இருக்கும் உயரமான மரத்தை தேர்வு செய்தார்.
அந்த மரத்தின் மீது கட்டிலை கட்டி பரண் போல் அமைத்து சிவா அதில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகள், உணவு ஆகியவற்றை குடும்ப உறுப்பினர்கள் நேரம் தவறாமல் கயிறு மூலம் சிவாவுக்கு அனுப்பி  வைக்கின்றனர். இரவு தூக்கமும் சிவாவுக்கு மரத்தின் மீதுதான். வாலிபரின் இந்த வினோத செயல் புதிய வகையான தனிமைப்படுத்துதலை காட்டியுள்ளது. 

தலைப்புச்செய்திகள்