Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பஞ்சாபில் 2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை

மே 16, 2021 08:17

லூதியானா: பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப்புலனாய்வுப்பிரிவு உதவி சப்-இன்ஸ்பெக்டர்களாக பக்வான் சிங், தல்விந்தர் சிங் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று ஜக்ரானில் உள்ள உணவு தானிய சந்தை அருகே பணியில் இருந்தனர்.

அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், பக்வான்சிங், தல்விந்தர் சிங் இருவர் மீதும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் குண்டு பாய்ந்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்களை பிடிக்கவும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.

இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. 2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்