Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மயிலாடுதுறையில் கொள்ளையனால் தாக்கப்பட்ட கோயில் காவலாளி உயிரிழப்பு

மே 16, 2021 10:28

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கொள்ளையனால் தாக்கப்பட்ட கோயில் காவலாளி திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.
  
மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில் விசாலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோயிலின் இரவுநேர காவலராக செங்கமேட்டுத்தெருவை சேர்ந்த சாமிநாதன்(55) என்பவர் கோயிலிலேயே தங்கி பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில் கடந்த 9ம் தேதி கோயிலில் சுவர்ஏறி குதித்து சாமிநாதனை கொடூரமாக தாக்கிவிட்டு கோயில் சுவாமி சன்னதி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ மற்றும் சில்வர் உண்டியலை உடைத்தபோது உண்டியலில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றமடைந்த மர்மநபர் அங்குயிருந்து தப்பியோடிவிட்டார்.

படுகாயமடைந்து சாமிநாதனை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையனை மயிலாடுதுறை போலீசார்  வலைவீசி தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்