Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம், நோ வேஸ்ட் புட் சார்பில் போலீசாருக்கு உணவுகள்

மே 16, 2021 12:40

திருப்பூர்:  திருப்பூரில் ஊரடங்கு நாளன்று இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் மற்றும் நோ வேஸ்ட் புட் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று அதிவேகமாக பரவிவரும் நிலையில் தமிழக அரசு ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. அதன் இரண்டாவது வார ஊரடங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காவல் துறையினர்களுக்கு காலை மதியம் இரவு என மூன்று நேரமும் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.

சாலையோரம் உள்ள மாற்றுத்திறனாளிகள் சுமார் 300 பேருக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டது. இந்த சேவையை இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் இந்திராசுந்தரம், நோ ஃபுட் வேஸ்ட் முத்து கிரஷர் பத்மநாதன் இணைந்து செய்தனர். 

இந்த சேவைகளுக்கு தடையிலாமல் ஊக்கமளித்து பாராட்டிய வடக்கு காவல் உதவி ஆணையர் வெற்றிவேந்தன், வடக்கு ஆய்வாளர் கணேசன் மற்றும் தெற்கு ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோருக்கு அமைப்புகள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்