Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டவ் தே புயல் எதிரொலி - குஜராத், மும்பையில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

மே 17, 2021 05:56

அகமதாபாத்: அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று குஜராத் நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக கேரளா, கர்நாடகம் மற்றும் கோவா மாநிலங்களில் கனமழை பெய்கிறது.

இதேபோல் மகாராஷ்டிரா, குஜராத்திலும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பேரிடர் மீட்பு படையினர்
தயார் நிலையில் உள்ளனர்.

குஜராத் கடலோர பகுதியில் மே 17-ம் தேதி மற்றும் மே 18-ம் தேதி மிகமிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, சில இடங்களில் மிகத்தீவிர மழை
பெய்ய வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும்போது, 155 முதல் 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டவ் தே புயல் எதிரொலியாக இன்றும் நாளையும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி
வைக்கப்பட்டு உள்ளது என குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல், மும்பையிலும் புயலின் தாக்கம் உள்ளதால் இன்று ஒருநாள் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள்
தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்