Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பூந்தமல்லி அருகே மலையாள பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

மே 17, 2021 06:07

தனியார் தொலைக்காட்சி சார்பில் தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்நிகழ்ச்சி, மலையாளம்,
தெலுங்கு மொழியில் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகி வருகின்றன.

இந்நிலையில், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்வுக்கான படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியில்
உள்ள தனியார் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர்
மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார்.

இச்சூழலில், கரோனா தடுப்புநடவடிக்கையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள், அந் நிகழ்ச்சியின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு புதன்கிழமைதோறும்
கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மலையாள பிக்பாஸ் தொழில்
நுட்பக் கலைஞர்கள் 6 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், போதிய தடுப்பு நடவடிக்கைகளோடு, படப்பிடிப்பு தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தலைப்புச்செய்திகள்