Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டி.வி.க்களில் கொரோனா குறித்து விழிப்புணர்வு- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மே 17, 2021 06:46

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அனைத்து காட்சி ஊடகத்தினருடன் (தொலைக்காட்சி) நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் தனது உரையில், கொரோனா நோய் தொற்று நடவடிக்கையில், முன்கள பணியாளர்களாக விளங்கும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கூட்டத்திற்கு வந்தவர்களை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வரவேற்றுப் பேசினார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நன்றி நிகழ்த்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொலைக்காட்சிகளில் செய்திகள் வாசிக்கும்போது அடிக்கடி ஒளி, ஒலிபரப்பு செய்ய வேண்டிய வாசகங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்கள் முக கவசத்துடன் தொடங்க வேண்டும். பின்னர் நாங்கள் தனி அறையில் இருப்பதால் முக கவசம்
அணியவில்லை, நீங்கள் அவசியம் அணிய வேண்டும் என கூற வேண்டும்.

தொலைக்காட்சிகளில் தொடர் நாடகங்கள் மற்றும் செய்திகள் ஒளிபரப்பப்படும் போது, ‘முககவசம் உயிர் கவசம், முறையான முககவசம் அணிவோம்
கொரோனாவை முற்றிலும் தவிர்ப்போம், சமூக இடைவெளி காப்போம் உறவுகளுடன் வாழ்வோம், முகம், கை சுத்தம் பேணுவோம் கொரோனாவை
தோற்கடிப்போம், அவசியமின்றி வெளியே வர வேண்டாம் அருகே மரணத்தை அழைக்க வேண்டாம், கூடி பேசுவதை தவிர்ப்போம் ஒட்டுமொத்த
சமுதாயத்தையும் காப்போம்,

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்