Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கு கோவிசில்டு தடுப்பு ஊசி 

மே 17, 2021 11:15

திருப்பூர்: திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன் களப்பணியாளர்களான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கு கோவிசில்டு எனும் தடுப்பு ஊசி போடப்பட்டது.

தமிழகத்தில் இரண்டாவது அலையாக கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது இந்த நிலையில் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சில தளர்வுகள் உடன் கூடிய முழு ஊரடங்கு வருகிற 24-ஆம் தேதி வரை அறிவித்திருந்தது, 

மருத்துவர், செவிலியர், காவல்துறையினர், பத்திரிக்கையாளர் ஆகியோர் முன் கள பணியாளர்களாக அரசு அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆல் இந்தியா எல்பிஜி டிஸ்ட்ரிபியூட்டர் பெடரேஷன் சார்பில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் ஆல் இந்தியா எல்பிஜி டிஸ்ட்ரிபியூட்டர் பெடரேஷன்  துணைத்தலைவர் சாமிவேலு  தலைமையில் நடைபெற்றது. 

திருப்பூர் மாவட்ட தலைவர் சாமிநாதன்,  மாவட்ட பொருளாளர் சிவானந்தவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திமுக சட்டமன்ற உறுப்பினர். க.செல்வராஜ் கழகப் பொறுப்பாளர் தினேஷ்குமார் சம்பத்குமார் கோமகன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கொரோனா இரண்டாவது அலை பெருந்தொற்று காலத்தில் வீடுகளுக்கு சென்று கேஸ் சிலிண்டர் வழங்கும் தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கோவி ஷீல்ட் எனும் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது. 

முன்னதாக தொழிலாளர்கள் அனைவருக்கும் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் முக கவசம் அணிந்து செல்வது அடிக்கடி கை கழுவுதல்  சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட  அறிவுரைகள் வழங்கப்பட்டன இதில் ஏராளமான சமையல் எரிவாயு தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்