Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் பயங்கர தீவிபத்து

மே 18, 2021 05:32

சேலம்: மேட்டூர் பழைய அனல் மின்நிலையத்தில் ஒரு அலகில் 210 மெகாவாட் வீதம் 4 அலகுகளில் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கடந்த 2 நாட்களாக மின் தேவை குறைந்ததால் 630 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இந்த 4 அலகுகளுக்கும் நிலக்கரி குவித்து வைத்துள்ள யார்டில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி எடுத்து செல்லப்படும்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த நிலக்கரி எரியும்போது கன்வேயர் பெல்ட்டும் சேர்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து மேட்டூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வரும் நாட்களில் அனல்மின்
நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்