Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிநாடுகளிடம் இருந்து 5½ லட்சம் ரெம்டெசிவிர், 16 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர் நன்கொடை

மே 18, 2021 05:38

புதுடெல்லி: கொரோனாவை எதிர்கொள்வதற்காக உலக நாடுகள் பல உதவிக்கரம் நீட்டி உள்ளன. வெளிநாடுகளிடம் இருந்து இதுவரை 9 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள், 11 ஆயிரத்து 321 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15 ஆயிரத்து 801 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 7 ஆயிரத்து 470 வென்டிலேட்டர், 5½ லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் உதவியாக பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா, ருமேனியா, அமெரிக்கா, கஜகஸ்தான், இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், கத்தார், குவைத் போன்ற நாடுகள் இதில் அதிகமான பங்களிப்பை
வழங்கி உள்ளன.

அவை அவ்வப்போது தேவையான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்