Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிவகாசியில் ஆக்சிஜன் வசதியுடன் தனியார் பள்ளி பேருந்து கரோனா வார்டாக மாற்றம்

மே 18, 2021 07:30

சிவகாசியில் பள்ளி பேருந்தில் 5 ஆக்சிஜன் செலுத்தும் கருவி களை பொருத்தி அரசு மருத்துவ மனைக்கு தனியார் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. சிவகாசியில் உள்ள ஹயக்ரிவாஸ் சர்வதேசப் பள்ளியும், சிவகாசி ஜேசிஐ டைனமிக்கும் இணைந்து பள்ளி பேருந்தை கரோனா வார்டாக மாற்றி அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளன. இப்பேருந்தில் ரூ.3.25 லட்சம் மதிப்புள்ள 5 ஆக்சிஜன் செலுத்தும் கருவி களைப் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் ஒரே நேரத்தில் 10 நோயாளிகளுக்கு ஆக்சி ஜன் அளிக்க முடியும். மேலும், காற்றோட்டத்துக்காக பேருந்தில் மின்விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இப்பேருந்து கரோனா தொற்று முடியும் வரை நோயாளிகளின் பயன்பாட்டுக்காக சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும். முன்னதாக பள்ளி பேருந்தை அரசு மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சியில் சிவகாசி சார்ஆட்சியர் தினேஷ்குமார், சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்