Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் பெறப்பட்ட 549 மனுக்கள் மீது துரித நடவடிக்கை

மே 19, 2021 05:44

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது மு.க.ஸ்டாலின் பல்வேறு பிரசார யுக்திகளை கையாண்டார். அதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பொதுமக்கள் குறைகேட்கும் பிரசார பயணம் ஆகும்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் முன்பு கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ‘உங்கள்
தொகுதியில் ஸ்டாலின்’ என்ற அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது அவர், ‘இந்த பிரசார பயணம் மூலம் தமிழகம் முழுவதும் சென்று மக்களின் கோரிக்கை மனுக்களை நேரில் பெற்று, தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 100
நாளில் தீர்த்து வைப்பேன்’ என்று உறுதிமொழியை அறிவித்து சபதம் ஏற்றார்.

பின்னர் அவர், இந்த பயணத்தை திருவண்ணாமலையில் ஜனவரி 29-ந் தேதி தொடங்கி சென்னையில் பிப்ரவரி 28-ந் தேதி நிறைவு செய்தார். மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு திட்டம் வகுத்தார். ஆனால் அவரால் 187 தொகுதிகளுக்கு மட்டுமே செல்ல முடிந்தது. கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு, தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் போன்ற கட்சி பணிகள் காரணமாக அவரால் 47 தொகுதிகளுக்கு நேரில் செல்ல முடியவில்லை. எனினும் அந்த தொகுதி மக்களின் குறைகளையும் நிர்வாகிகள் மூலம் மு.க.ஸ்டாலின் பெற்றார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட மனுக்கள் 72 பெட்டிகள் மூலம் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி கொண்டு வரப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் மனுக்கள் இணையதளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் பெறப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் 100 நாட்களில் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை, வாக்குறுதியை தொடர்ந்து சொல்லி
கொண்டிருக்கிறேன். இப்போது மீண்டும் அந்த உறுதிமொழியை அளிக்கிறேன்’ என்றார்.

தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்றவுடன் முதல் உத்தரவாக, பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண்பதற்காக ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற தனித்துறையை உருவாக்கி, அதற்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் என்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்தார்.

பொதுமக்கள் மனுக்கள் அளித்த பெட்டியின் சாவிகளை அந்த அதிகாரியிடம் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார். தற்போது அந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்