Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 525 பேர் பலி: புதிதாக 30,309 பேருக்கு வைரஸ் தொற்று

மே 19, 2021 05:48

பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொேரானா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று 93 ஆயிரத்து 247 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 30 ஆயிரத்து 309 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 72 ஆயிரத்து 374 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 525 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 838
ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 58 ஆயிரத்து 395 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் 16 லட்சத்து 74 ஆயிரத்து 487 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 28 ஆக உள்ளது.

பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 8 ஆயிரத்து 676 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 295 பேர், பல்லாரியில் 1,799 பேர், பெலகாவியில் 2 ஆயிரத்து 118 பேர், பெங்களூரு புறநகரில் 1,339 பேர், பீதரில் 113 பேர், சாம்ராஜ் நகரில் 345 பேர், சிக்பள்ளாப்பூரில் 339 பேர், சிக்கமகளூருவில் 401 பேர், சித்ரதுர்காவில் 436 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தட்சிண கன்னடாவில் 777 பேர், தாவணகெரேயில் 594 பேர், தார்வாரில் 969 பேர், கதக்கில் 543 பேர், ஹாசனில் 834 பேர், ஹாவேரியில் 187 பேர், கலபுரகியில் 548 பேர், குடகில் 161 பேர், கோலாரில் 1,021 பேர், கொப்பலில் 523 பேர், மண்டியாவில் 606 பேர், மைசூருவில் 1,916 பேர், ராய்ச்சூரில் 493 பேர், ராமநகரில் 427 பேர், சிவமொக்காவில் 1,168 பேர், துமகூருவில் 1,562 பேர், உடுப்பியில் 737 பேர், உத்தரகன்னடாவில் 803 பேர், விஜயாப்புராவில் 262 பேர், யாதகிரியில் 317 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 298 பேரும், பல்லாரியில் 28 பேரும், பீதரில் 4 பேரும், சாம்ராஜ்நகரில் 8 பேரும், சிக்பள்ளாப்பூரில் 5 பேரும், சிக்கமகளூருவில் 2 பேரும், சித்ரதுர்காவில் ஒருவரும், தட்சிண கன்னடாவில் 7 பேரும், தாவணகெரேயில் 4 பேரும், தார்வாரில் 3 பேரும், கதக்கில் 5 பேரும், ஹாசனில் 18 பேரும், ஹாவேரியில் 6 பேரும், கலபுரகியில் 7 பேரும், குடகில் 3 பேரும், கோலாரில் 2 பேரும், கொப்பலில் 10 பேரும், மண்டியாவில் 4 பேரும், மைசூருவில் 13 பேரும், ராய்ச்சூரில் 3 பேரும், ராமநகரில் 3 பேரும், சிவமொக்காவில் 15 பேரும், துமகூருவில் 15 பேரும், உடுப்பியில் 3 பேரும்,
உத்தரகன்னடாவில் 22 பேரும், விஜயாப்புராவில் 8 பேரும், யாதகிரியில் 3 பேரும் என இவர்கள் உள்பட மொத்தம் 525 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் சுமார் 38 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று 30 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. ஒரே நாளில் பாதிப்பு 8 ஆயிரம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 525 பேர் பலியாகியுள்ளனர். இந்த உயிரிழப்பு, அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் கடந்த
ஒரு வாரமாக பரிசோதனைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே பரிசோதனையை அதிகரித்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து அவர்களை குணப்படுத்தினால் மட்டுமே கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க வாய்ப்பு ஏற்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்