Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் 1.8 சதவீத மக்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு - மத்திய அரசு சொல்கிறது

மே 19, 2021 06:14

புதுடெல்லி: நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் நேற்று கூறியதாவது:-
நமது நாட்டில் நிறைய எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக பதிவாகி உள்ளது. ஆனாலும்கூட மக்கள் தொகையில் 2
சதவீதத்துக்கும் குறைவானோருடன் நம்மால் இந்த தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது. இதுவரை மொத்த மக்கள் தொகையில் 1.8 சதவீதத்தினர்
மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 98 சதவீதத்தினர் இன்னும் கொரோனா பாதிப்பு அபாயத்தில் இருப்பவர்கள்தான்.

கடந்த 15 நாட்களாக கொரோனா பாதித்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 13-ந் தேதியன்று சிகிச்சை
பெறுவோர் விகிதம் 17.13 சதவீதமாக இருந்தது. இப்போது அது 13.3 சதவீதமாக குறைந்துள்ளது. 8 மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள்
சிகிச்சையில் உள்ளனர். 22 மாநிலங்களில் பாதிப்பு விகிதம் 15 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.

மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, பீகார், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் புதிய பாதிப்புகள் குறைந்து வருகின்றன. மராட்டியம்,
உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு விகிதமும் குறைந்து இருக்கிறது. கடந்த 2 வாரங்களில் இருந்து 199
மாவட்டங்களில் கொரோனாவின் புதிய பாதிப்புகளும், பாதிப்பு விகிதமும் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்