Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிங்கப்பூருக்கு விமான சேவையை ரத்து செய்யுங்கள் - மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்

மே 19, 2021 06:21

புதுடெல்லி: குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு புதியவகை கொரோனா வைரஸ் சிங்கப்பூரில் தோன்றியுள்ளதால், சிங்கப்பூர் உடனான அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘சிங்கப்பூரில் தோன்றியுள்ள ஒரு புதிய வகை கொரோனா வைரஸ், குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாக கூறப்படுகிறது. அந்த கொரோனா வைரஸ், மூன்றாவது அலை வடிவில் டெல்லியை அடையக்கூடும். இந்நிலையில் மத்திய அரசுக்கு எனது வேண்டுகோள். சிங்கப்பூர் உடனான அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக ரத்து செய்யுங்கள். முன்னுரிமை அடிப்படையில் குழந்தைகளுக்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுங்கள்’ என்று கூறியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்