Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசு பாலாற்றை பாதுகாக்க வேண்டும்: கஜேந்திரன்  

மே 19, 2021 04:37

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் ‌நீராதாரமாக விளங்கும் பாலாறு இன்று கழிவுநீர் வழிந்தோடும் மிகப்பெரிய கால்வாயாக மாற்றப்பட்டுள்ளது. 

நகராட்சி, மாநகராட்சி பேரூராட்சி ஊராட்சி என  ஏறத்தாழ அனைத்து கழிவுகளும் பாலாற்றில் கலக்கப்படுகிறது. ‌‌ சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சிகளின் மண்டல நிர்வாக அலுவலரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 'பாலாற்றில் கலக்கும்  கழிவு நீர் எப்போது தடுக்கப்படும்" என்ற கேள்விக்கு "பாதாளச்சாக்கடை திட்டம் அமல் படுத்தும் போது தடுக்கப்படும் " என்ற பதில் வந்தது.

ஆனால் பாதாளச்சாக்கடை திட்டம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் பாலாற்றில் கலக்கப்படுகிறது.  இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து பாலாற்றை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சமதர்ம பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

தலைப்புச்செய்திகள்