Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பல்லாவரம் 29வது வார்டில் கொரோனாவுக்கு 5 பேர் பலி: அப்பகுதி முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

மே 19, 2021 04:43

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள்  மிக வேகமாக பரவி வருகிறது. சென்னை புறநகர் பகுதி பல்லாவரம், தாம்பரம் தாலுகாக்களில் நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக பல்லாவரம் நகராட்சியில் 2110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் நிலவரப்படி 181 பேர் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாவரம் நகராட்சி ஆணையாளர் மதிவாணன் தலைமையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தெருக்களில் இரும்பு தடுப்புகளை அமைத்து காலை, மதியம், மாலை என 3 வேளையும் கிருமி நாசினி தெளித்து, பீளிச்சீக்கப்பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சுகாதார மருத்துவர்கள் மூலமாக ஒவ்வொரு வீடாகச் சென்று உடல் வெப்பம் கணக்கிட்டு அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து ஒவ்வொருவருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்