Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க தமிழக அரசு அனுமதி

மே 20, 2021 04:23

சென்னை:  வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெறும் வகையில் ஓராண்டு பணிபுரிந்த பின்பே மருத்துவ பணி தொடர வேண்டும் என்ற விதி இருந்தது. 

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை காரணமாக இந்த 2 விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் மருத்துவம் படித்து காத்திருக்கும் 500 பேரும் உடனடியாக மருத்துவ பணியை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

தலைப்புச்செய்திகள்