Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா, சீனாவில் வர்த்தகம் அதிகரிப்பு - ஐ.நா. அறிக்கையில் தகவல்

மே 20, 2021 06:17

நியூயார்க்: 2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவல்களை வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா. மாநாடு நேற்று வெளியிட்டது. இதில் முக்கியமாக கொரோனா நெருக்கடிக்கு முன்பிருந்ததை விட மேற்படி காலாண்டில் உலக வர்த்தகம் அதிகமாக இருந்ததாகவும் அதாவது 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டை விட இந்த காலாண்டில் 3 சதவீதம் அளவுக்கு அதிகமாக இருந்ததாகவும் ஐ.நா. கூறியுள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளின் வலுவான ஏற்றுமதி செயல்திறனால் இந்த காலாண்டில் வர்த்தகத்தின் மீள் உருவாக்கம் தொடர்ந்து வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

நாடுகளின் தனிப்பட்ட செயல்பாட்டை பொறுத்தவரை மேற்படி காலாண்டில் உலகின் பிற பெரிய பொருளாதார நாடுகளைவிட இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சிறந்து விளங்கியதாக ஐ.நா. குறிப்பிட்டு உள்ளது.

இந்தியாவில் 2020-ம் ஆண்டின் சராசரியுடன் ஒப்பிடுகையில் சரக்கு இறக்குமதி 45 சதவீதமும், சேவை இறக்குமதி 14 சதவீதமும் அதிகரித்து உள்ளது. ஏற்றுமதியை பொறுத்தவரை சரக்கு மற்றும் சேவை முறையே 26 மற்றும் 2 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஐ.நா.வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்