Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டவ்தே புயல் எதிரொலி - டெல்லியில் 60 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச வெப்பநிலை குறைந்தது

மே 20, 2021 06:36

புது டெல்லி: டவ்தே புயல் தாக்கம் காரணமாக டெல்லி, புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. வானிலை இதமாக காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி சப்தர்ஜங்கில் நேற்று காலை 8.40 மணி முதல் இரவு 8.30 மணி நிலவரப்படி 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. டெல்லி சப்தர்ஜங்கில் அதிகபட்ச வெப்பநிலையாக 23.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. 1951-ம் ஆண்டுக்கு பிறகு மே மாதம் பதிவான குறைந்த அளவு பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.

இதற்கு முன் கடந்த 1982-ம் ஆண்டு மே 13-ந் தேதி பதிவான குறைவான அதிகபட்ச வெப்பநிலை 24.8 டிகிரி செல்சியஸ் ஆகும்.

தலைப்புச்செய்திகள்