Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடிக்கு முக்கியமான 3வது கட்ட தேர்தல்

ஏப்ரல் 22, 2019 12:55

புதுடில்லி: நாளை நடக்க உள்ள 3வது கட்ட தேர்தல், பிரதமர் மோடிக்கு முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது. லோக்சபாவுக்கு ஏற்கனவே 2 கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. இந்த இரண்டிலுமே பா.ஜ.,வுக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இதுவரை தேர்தல் நடந்த உ.பி., மகாராஷ்டிரா தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படலாம். 

கர்நாடகாவில் அதிக பாதிப்பு வர வாய்ப்பு இல்லை. ஆனாலும் சென்ற தேர்தலைவிட இம்முறை நிலைமை மேம்படும் என்றும் கூற முடியவில்லை.ஆனால் ஏற்கனவே 2 கட்ட தேர்தல்களும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று மோடி நம்புகிறார். 

வங்கம் மற்றும் ஒடிஷா:மூன்றாவது கட்ட தேர்தல் நடக்கும் வங்கம் மற்றும் ஒடிஷாவில் அதிக வெற்றி பெறுவோம் என பா.ஜ., நம்புகிறது. இந்த இரு மாநிலங்களிலும் 2வது பெரிய கட்சியாக பா.ஜ., மாறி வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் எவ்வளவு இடங்களை இக்கட்சி பிடிக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. 

2014 தேர்தலில் மோடி அலை அடித்தபோது கூட வங்கத்தில் 2 இடங்களில் தான் பா.ஜ., வெற்றி பெற்றது. ஆனால் அக்கட்சி 17 சதவீத ஓட்டுகளைப் பெற்று ஒரு மரியாதையை பெற்றது. வங்கத்தில் குறிப்பிட்ட அளவு ஓட்டுகளை பெற்று, உ.பி.,யில் நஷ்டத்தை குறைத்தால் ஜாதி அரசியல் நடக்கும் வடமாநிலங்களில் பா.ஜ.,வுக்கு லாபம் கிடைக்கும்.  

உ.பி.,யின் முக்கியத்துவம்:உ.பி.,யில் உள்ள 80 தொகுதிகள், பா.ஜ.,வுக்கு இங்கு கிடைக்கும் ஓட்டுகளால் இம்மாநிலம் முக்கியத்துவம் பெறுகிறது. அக்கட்சிக்கு இங்கு கிடைக்கும் வெற்றிதான் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்குமா கிடைக்காதா என்பதை முடிவு செய்யும். 

அம்மாநிலத்தில் சமாஜ்வாதி, பகுஜன், ராஷ்ட்ரிய லோக்தள் ஆகிய கட்சிகள் இடையே ஏற்பட்ட தொகுதி உடன்பாடு தான் பா.ஜ.,வுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. 
மேற்கு உ.பி.,யில் முஸ்லீம்கள், ஜாட் மற்றும் ஜாதவ் இன மக்கள் மட்டும் சுமார் 50 சதவீதம் பேர் உள்ளனர். இன்னொரு பெரும்பான்மை சமூகமான யாதவர்கள் மேற்கு உ.பி.,யில் சிறிது அளவும் மத்திய மற்றும் கிழக்கு உ.பி.,யில் அதிகமாகவும் வசிக்கின்றனர். 

கடுமையான பிரசாரத்தால் மோடிக்கு செல்வாக்கு இன்னும் உள்ளது தெரிகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தியையும் அவரது பிரசாரம் குறைத்துள்ளதாக கருதப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்