Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜஸ்தான் கிராமத்தில் ஒரே மாதத்தில் 43 பேர் பலி - கொரோனா காரணமா?

மே 20, 2021 06:43

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்துக்கு உட்பட்ட சோமல்பூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23 பெண்கள் உள்பட 43 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் ஆவர்.

உயிரிழந்தவர்களில் 7 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். மீதமுள்ளவர்களுக்கு சிறுநீரக பிரச்சினை, நீரிழிவு போன்ற உபாதைகள்
இருந்ததாக கிராம சுகாதார மைய டாக்டர் குக்கும் சிங் தெரிவித்தார்.

சுமார் 9 ஆயிரம் பேர் வாழும் இந்த கிராமத்தில் வழக்கமாக 20 முதல் 23 பேர் வரை ஒரு மாதத்தில் உயிரிழப்பார்கள் எனக்கூறியுள்ள கிராம பஞ்சாயத்து தலைவர் சோகா நாத், ஆனால் இந்த மாதம் இருமடங்கு சாவு நேர்ந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாக கூறினார்.

இந்த கிராமத்தில் கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருப்பதாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனாவால்தான்
இறந்திருக்கக்கூடும் எனவும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிலர் கூறியுள்ளனர்.

இந்த இறப்புகளால் மிகப்பெரும் பீதிக்கு உள்ளாகியிருக்கும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர தயங்கி வருகிறார்கள். சோமல்பூர் கிராமத்தில் ஒரே மாதத்தில் 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கும் தகவல் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைப்புச்செய்திகள்