Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜஸ்தானில் கருப்பு பூஞ்சை பாதிப்பு தொற்று நோயாக அறிவிப்பு

மே 20, 2021 06:51

ஜெய்ப்பூர்: கொரோனாவில் இருந்து மீண்டுவரும் நோயாளிகளை கருப்பு பூஞ்சை எனப்படும் ஒருவித நோய் பாதித்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள்
கூறியுள்ளனர்.

இந்த பாதிப்பை தொற்றுநோயாக ராஜஸ்தான் அரசு நேற்று அறிவித்தது. அங்கு சுமார் 100 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த தகவலை மாநில சுகாதார முதன்மை செயலாளர் அகில் அரோரா வெளியிட்டார். இந்த நடவடிக்கையால் கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு சிகிச்சையை உறுதிசெய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்