Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலங்கையில் 9வது குண்டுவெடிப்பு

ஏப்ரல் 22, 2019 01:04

கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்புவில் மீண்டும் குண்டுவெடித்துள்ளது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எனினும் தொடர் குண்டுவெடிப்புகள் இலங்கை மக்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.  

கொழும்புவில் உள்ள தேவாலயம் ஒன்றின் அருகே கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர்களை செயலிழக்கச் செய்யும் போது நடந்த விபரீதத்தால் இந்த 9 வது குண்டுவெடிப்பு நடந்தது. 
இலங்கையில், ஈஸ்டர் திருநாள் அன்று 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில், கொச்சிக்கடை தேவலாயமும் ஒன்று. 

அதில் தீவிரவாதிகள் பயன்படுத்திய காரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க முயன்ற போதுதான் இந்த 9 வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. ஆனால், வெடிகுண்டு நிபுணர்கள் முழுமையான பாதுகாப்பு கவசங்களுடன் இருந்ததாலும், அப்பகுதியில் முன்னெச்சரிக்கையாக மக்களை அனுமதிக்காததாலும் யாருக்கும் எந்தபாதிப்பும் இல்லை. 

முன்னதாக, தொடர் குண்டுவெடிப்புகளால் 300 பேர் இறந்துள்ளனர். 400 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 5 இந்தியர்கள் உள்ளிட்டு 35 நாடுகளை சேர்ந்தோர் இறந்தவரில் அடக்கம். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா. பள்ளி கல்லுாரிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்