Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் கொரோனா பாதிப்பால் உயிர் இழப்பு ஏற்பட்டால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: திமுக சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எச்சரிக்கை

மே 20, 2021 08:06

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பண்ருட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, அனைத்து துறை அரசு அலுவளர்களுக்கான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அப்போது கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நகராட்சி , பேரூராட்சி , ஊராட்சி பகுதிகளில் அதிகாரிகள் வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து அதன் மூலம் கொரோனா பாதிப்பு குறித்தும் அரசு ஊரடங்கு குறித்தும் அறிவுறுத்த வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்தார்.

பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் இல்ல நிகழ்ச்சிகள் , திருவிழாக்களில் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கலந்து கொள்ளும்போது பேனர்கள் வைத்தாலோ வெடி வெடித்தாலோ அவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தால் தாம் தலையிட மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதை தொடர்ந்து மருத்துவம் , நகராட்சி , பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை ஈடுபட்டார். 

பண்ருட்டி தொகுதியில் மணல் கொள்ளை உள்ளிட்ட கனிம வளங்களை கொள்ளை அடிப்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் இனி வரும் காலங்களில் கொரோனா பாதிப்பால் உயிர் இழப்பு ஏற்பட்டால் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார். அரசு அதிகாரிகள் 24.மணி நேரம் போர்க்கால அடிப்படையில் கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.


 

தலைப்புச்செய்திகள்