Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா வார்டில் பணியில் உள்ள செவிலியர்கள் 28 பேருக்கு கொரோனா 

மே 21, 2021 01:52

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 105 செவிலியர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் 61 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இதில், 15க்கும் மேற்பட்டோர் மகப்பேறு உள்ளிட்ட காரணங்களால் விடுப்பில் சென்றுவிட்ட நிலையில் எஞ்சிய 90 செவிலியர்கள் 3 ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது, கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை, மயூரா ஹாலில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் மற்றும் கொரோனா வகைப்படுத்தும் மையத்திலும் இந்த செவிலியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். 

விடுப்பு எடுக்காமல் பணிக்கு சென்றுவந்த  செவிலியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில் 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டுள்ளதாக கூறப்படுகிறது. செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக கொரோனா தொற்று ஏற்பட்ட செவிலியர்களை தனிமைபடுத்திகொள்ள மருத்துவமனை நிர்வாகம் விடுப்பு வழங்காததால் கூடுதல் செவிலியர்களை பணியமர்த்தக்கோரியும், தொடர்ச்சியாக பணியாற்றுபவர்களுக்கு தேவையான விடுப்பினை வழங்கக் கோரியும், தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கக் கோரியும் செவிலியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகினர். 

இதுகுறித்த தகவல் அறிந்த மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலர் செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தததைத் தொடர்ந்து போராட்டம் செய்ய வந்த செவிலியர்கள் தங்கள் பணியை தொடர்ந்தனர்.

தலைப்புச்செய்திகள்