Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவாரூர் மாவட்டத்தில் டவ் தே புயல் உருவானதில் இருந்து வெயிலின் தாக்கம் குறைவு

மே 21, 2021 01:56

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் டவ் தே புயல் உருவானதில் இருந்தே வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்து வருகிறது. அவ்வப்போது வானம் மேகமூட்டமாக காணப்பட்டு வந்தது. 

இந்நிலையில் நேற்றிரவு தரை காற்றுடன் கூடிய மழை திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த மழை நீடித்தது. திருவாரூரில் 11.2 மில்லி மீட்டரும் குடவாசலில் 8.4 மில்லி மீட்டரும், வலங்கைமானில் 10.4 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 3 மில்லி மீட்டரும், பாண்டவையாறில் 7.2 கிலோமீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 12.6 மில்லி மீட்டரும் மழை பதிவானது. 

அதிகபட்சமாக மன்னார்குடியில் 18 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் மொத்த சராசரி 70.8 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இதன் சராசரி 7.86.

தலைப்புச்செய்திகள்