Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடவாசல் கீழ வீதியில் செயல்பட்டு வந்த பைவ் ஸ்டார் தனியார் நிதி நிறுவனம் பூட்டி சீல் வைக்கப்பட்டது

மே 21, 2021 02:04

திருவாரூர்: தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் கொரோனா இரண்டு அலையொட்டி மே 24 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, பொதுமக்களின்  சிரமத்தை மேற்கொண்டு சில தளர்வுகள் அளித்து நடைமுறையிலுள்ளது, இந்த நிலையில் கொரோனா பெரும் தொற்று காரணமாக கிராமப்புற மக்கள் இருந்து நகரவாசிகள் வரை பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்,

தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் அன்றாட அத்தியவசிய மற்றும் மருத்துவ செலவுக்கு தினமும் அல்லாடும் மக்களைக் கருத்தில் கொண்டு நிதி நிறுவனங்கள் சார்பாக மகளிர்  குழுக்களுக்கு கடனாக வழங்கிய தொகையை மறு உத்தரவு வரும் வரை கடன் தொகையை வசூல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என அரசு உத்தரவிட்ட உள்ள நிலையில்,அரசின் உத்தரவை மீறி குடவாசல் பகுதியில் தனியார் நிதிநிறுவனங்கள் மகளிரிடம் அடாவடித்தனமாக கடன் தொகை வசூல் செய்வதாக குடவாசல் வட்டாட்சியர் ராஜன்பாபு க்கு புகார் தொடர்ந்து வந்தது.

புகாரை அடுத்து உடனடியாக புகார் வந்த தனியார் நிதி நிறுவனத்தை அதிரடியாக பூட்டி சீல் வைத்தார். நடவடிக்கையின்போது குடவாசல் ஆய்வாளர் ரேகாராணி மற்றும் குடவாசல் பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா ஆகியோர் இருந்தனர்.பொதுமக்களின்  புகாரை அடுத்து உடன் நடவடிக்கை எடுத்த வட்டாட்சியரை பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்