Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்முறையாக திருப்பூருக்கு வருகை தந்த  முதல்வர் மு.க.ஸ்டாலின்: 3 கோடி 60 லட்சம் கொரானா நிதி வசூல்!!

மே 21, 2021 02:30

திருப்பூர்: தமிழகம் முழுவதும் நேற்று 18 முதல் 45 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் துவங்கப்படும் என தமிழக அரசின் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பூரில் உள்ள நேதாஜி ஆயத்த ஆடைத் தொழில் நுட்ப பூங்காவில் நடைபெற்ற சிறப்பு முகாமை முகாமை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

முன்னதாக சேலம் மாவட்டத்தில் கொரோனா  தடுப்பு ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் திருப்பூருக்கு மதியம் 12.03 மணிக்கு நேதாஜி ஆயத்த ஆடைத் தொழில் நுட்ப பூங்காவில் வந்தார் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  18 வயதினருக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து திருப்பூரைச் சேர்ந்த பல்வேறு தொழிலதிபர்கள் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கப்பட்ட ரூபாய் 3 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெற்றுக்கொண்டார். 

திருப்பூரைச் சேர்ந்த ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் அதிகபட்சமாக 1 கோடி ரூபாயும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தலைவர் ராஜா சண்முகம் சார்பில் 50 லட்சம் ருபாயும் வழங்கினர். இது தவிர திருப்பூரை சேர்ந்த பல்வேறு தொழிலதிபர்களும் தங்கள் பங்களிப்புக்கான காசோலைகளை முதல்வரிடம் வழங்கினர்,

நிவாரண நிதிக்கான காசோலைகளை பெற்றுக்கொண்ட மு.க ஸ்டாலின் சுமார் 12.17 மணிக்குநிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கோவைக்கு சென்றார். இந்நிகழ்ச்சியில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், எம்எல்ஏ செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ், டிஐஜி நரேந்திரன்நாயர், , திருப்பூர் மாவட்ட எஸ்.பி.திஷாமித்தல், திருப்பூர் மாநகர போலீஸ்கமிஷனர்  கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்

தலைப்புச்செய்திகள்