Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கோவிட் இல்லாத நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள்: முதல்வர் ஸ்டாலின்

மே 21, 2021 02:34

சென்னை: திமுக ஆட்சியமைத்த நாளில் இருந்தே அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதற்கு முன் திருச்சியில் கூடுதலாக 400 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* ஆட்சிக்கு வந்த நாளைவிடவும் தமிழகத்தில் கொரானா வைரஸ் இல்லாத நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள். ஜூன் 3-ம் தேதிக்குள் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும். தடுப்பூசி ஒதுக்கீடு, ஆக்சிஜன் விநியோகத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

* நிலைமை சரியானதும் டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழகத்தின் உரிமைகளை கேட்டு பெறுவோம். தமிழக மக்கள் அனைவரும் கட்டாய் முகக்கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

* தடுப்பூசி இறக்குமதிக்கு உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது. * தமிழக மக்களின் உயிர்காக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்