Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக பட்ஜெட் 8ம் தேதி தாக்கல்: சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

பிப்ரவரி 01, 2019 02:48

சென்னை: தமிழக சட்டசபை கடந்த மாதம் 2-ந் தேதி கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். அதன்பின்பு 8-ந் தேதி சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.  

இந்நிலையில், தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 8-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் இன்று அறிவித்துள்ளார். அன்றைய தினமே, 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  

நிதித்துறையை கவனிக்கும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் பட்ஜெட்டில் பல முக்கிய திட்டங்கள், வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 

தலைப்புச்செய்திகள்