Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலங்கை கிரிக்கெட்டின் வருவாய் இழப்பை சரிகட்ட கூடுதல் போட்டியில் விளையாட பிசிசிஐ சம்மதம்

மே 22, 2021 06:25

இந்திய ஒயிட்-பால் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.

இதை ஈடுகட்டும் வகையில் ஜூலை மாதம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. கடந்த வருடம் சர்வதேச போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இலங்கை கிரிக்கெட் போர்டுக்கு அதிகப்படியான இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது கூடுதல் போட்டிகள் நடத்தினால் டெலிவிசன் உரிமை மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம்
கூடுதல் போட்டியில் விளையாட இலங்கை கேட்டுக்கொண்டது. இந்தியாவும் சம்மதம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்