Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநிலங்களிடம் 1.6 கோடி தடுப்பூசி கையிருப்பு - இதுவரை 21 கோடி ‘டோஸ்’ வினியோகம்

மே 23, 2021 07:02

புதுடெல்லி: நமது நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 21 கோடியே 33 லட்சத்து 74 ஆயிரத்து 720 டோஸ் தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது.

நேற்று காலை வரையில் 19 கோடியே 73 லட்சத்து 61 ஆயிரத்து 311 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன. மாநிலங்கள் வசம் கையிருப்பாக 1 கோடியே 60 லட்சத்து 13 ஆயிரத்து 409 தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு 2 லட்சத்து 67 ஆயிரத்து 110 தடுப்பூசிகளை மத்திய அரசு வினியோகிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

தலைப்புச்செய்திகள்