Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேலம்-சென்னை இடையே விமான சேவை மீண்டும் தொடக்கம்

மே 24, 2021 11:19

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தனியார் விமான சேவை நடைபெற்று வருகிறது. மேலும் திருப்பதி, கடப்பா, ஷீரடி ஆகிய நகரங்களுக்கு இணைப்பு விமான சேவையும் உள்ளது. இந்த நிலையில் கொரோனா 2‍ம் அலை பரவல் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு விமான சேவை நிறுத்தப்பட்டது.
 
இந்த நிலையில் நேற்று விமான சேவை மீண்டும் தொடங்கியது. சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு விமானம் புறப்பட்டு சேலத்துக்கு 8.15 மணிக்கு வந்து சேர்ந்தது. மறுமார்க்கத்தில் சேலத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்ட விமானம் 9.35 மணிக்கு சென்னையை அடைந்தது.

முதல் நாளில் சென்னையில் இருந்து சேலம் வந்த விமானத்தில் 10 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். அதேபோல் சேலத்தில் இருந்து சென்னைக்கு 16 பயணிகள் மட்டுமே சென்றனர். கொரோனா அச்சம் காரணமாகவே மக்கள் விமான போக்குவரத்தை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்