Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாகராயம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கு கொரோனா

மே 25, 2021 05:55

கோவை. மே. 25- கோவை வாகராயம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கு தொற்று ஏற்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. 

கோவை மாநகரில் ஏற்பட்டுள்ளன கொரோனா கிராமங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில் நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் கிராமங்களில் தடுப்புப் பணிகளை முறையாக மேற்கொள்வது என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை வாகராயம்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அந்த சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலம் மோப்பிரிபாளையம் பேரூராட்சி, காடுவெட்டிபாளையம், கிட்டாம்பாளையம், பச்சாபாளையம்,கணியூர் உட்பட ஏழு பஞ்சாயத்துகளை சேர்ந்த 30 கிராம மக்கள் பயனடைந்து வந்தனர். ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலியமாக மூடப் பட்டு விட்டதால் கிராம மக்கள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் வாகராயம்பாளையம் தினமும் ஒருவரான பாதிப்பினால் உயிரிழந்து வருவதாக கூறப்படுகின்றது. 

எனவே உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து மக்களுக்கு சேவை அளிக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்கிடையில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு ஊர் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்